Thursday, June 4, 2009

நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை

படம்:- வாரணம் ஆயிரம்
பாடல்:- தாமரை
இசை:- ஹாரிஸ் ஜெயராஜ்

நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன் வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை

ஒ ஷாந்தி ஷாந்தி ஒ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் என்னை தாண்டி?
இனி நீதான் எந்தன் அந்தாதி

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ள தனம் ஏதும் இல்லா
புன்னகயோ போகன்வில்லா

நீ நின்ற இடம் என்றால் விலை ஏறி போகாதோ?
நீ செல்லும் வழி எல்லாம் பனி கட்டி ஆகாதோ?
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே

தூக்கங்களை தூக்கி சென்றாய்
ஏக்கங்களை தூவி சென்றாய்
உன்னை தாண்டி போகும் போது
வீசும் காற்றின் வீச்சு வேறு

நில் என்று நீ சொன்னால் என் காலம் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் என்னை கேட்க வில்லை
கேட்டால் அது காதல் இல்லை

என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இது தானே
நீ இல்லை இல்லை என்றாலே
ஏன் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

Wednesday, June 3, 2009

பெயர் சொல்ல மாட்டேன்

கவிதை:- கவி இமையம் வைரமுத்து

மேகங்கள் எனைத்தொட்டுப் போனதுண்டு -
சிலமின்னல்கள் எனை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு -
மனம்சில்லென்று சிலபொழுது சிலிர்ததுண்டு
மோகனமே உன்னைப்போல என்னையாரும் - என்மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லைஆகமொத்தம்
என்நெஞ்சில் உன்னைப்போல -
எரிஅமிலத்தை வீசியவர் எவரும் இல்லை

கண்மணியே உன்னைக்காண வைத்ததாலே -
என்கண்களுக்கு அபிஷேகம் நடத்துகின்றேன்
பொன்மகளே நீ போகும் பாதையெல்லாம் -
தினம்பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன்
விண்வெளியின் மேலேறி உந்தன் பேரை -
காதல்வெறிகொண்டு கூவுதற்கு ஆசை கொண்டேன்
பெண்ணழகே உனைத்தாங்கி நிற்பதாலே -
இந்தப் பிரபஞ்சம் வாழ்கவென்று பாடுகின்றேன்

விதையோடு தொடங்குதடி விருட்சமெல்லாம் -
துளிவிந்தோடு தொடங்குதடி உயிர்கள் எல்லாம்
சதையோடு தொடங்குதடி காமம் எல்லாம் -
ஒருதாலாட்டில் தொடங்குதடி கீதமெல்லாம்
சிதையோடு தொடங்குதடி ஞானமெல்லாம் -
சிறுசிந்தனையில் தோன்றுதடி புரட்சியெல்லாம்
கதையோடு தோன்றுமடி இதிகாசங்கள் -
உன்கண்ணோடு தொடங்குதடி எனது பாடல்உலகத்தின் காதலெல்லாம் ஒன்றே ஒன்றே -
அதுஉள்ளங்கள் மாறிமாறிப் பயணம் போகும்
உலகத்தின் முத்தமெல்லாம் ஒன்றே ஒன்றே -
அதுஉதடுகளில் மாறிமாறிப் பயணம் போகும்
உலகத்தின் உயிரெல்லாம் ஒன்றே ஒன்றே -
அதுஉடல்கள் மாறிமாறிப் பயணம் போகும்
உலகத்தின் சுகமெல்லாம் ஒன்றே ஒன்றே -
என்உத்தரவுக் கிணங்கிவிடு புரிந்து போகும்

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே -
அடிதினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் -
உன் செவ்-வாயில் உள்ளதடி எனது ஜீவன் -
அதுதெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்?
எவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன் -
அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையிலே பேசிக் கொண்டே -
என் இரவுகளைக் கவிதைகளாய் மொழிபெயர்த்தேன்

பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே -
என்பிரியத்தை அதனால்நான் குறைக்கமாட்டேன்
சரிந்துவிடும் அழகென்று தெரியும் பெண்ணே -
என்சந்தோஷக் கலைகளைநான் நிறுத்த மாட்டேன்
எரிந்துவிடும் உடலென்று தெரியும் பெண்ணே -
என்இளமைக்குத் தீயிட்டே எரிக்க மாட்டேன்
மரித்துவிடும் உறுப்பென்று தெரியும் பெண்ணே -
என்வாழ்வில் நான் ஒரு துளியும் இழக்கமாட்டேன்

கண்ணிமையின் சாமரங்கள் வீசும் காற்றில் -
என்காதல் மனம் துண்டுதுண்டாய் உடையக் கண்டேன்
துண்டுதுண்டாய் உடைந்த மனத்துகளை எல்லாம் -
அடிதூயவளே உனக்குள்ளே தொலைத்து விட்டேன்
பொன்மகளே உனக்குள்ளே தொலைத்ததெல்லாம் -
சுகபூஜைகொள்ளும் நேரத்தில் தேடிப் பார்த்தேன்
கண்மணிஉன் கூந்தலுக்குள் கொஞ்சம் கண்டேன் -
உன்கால்விரலின் பிளவுகளில் மிச்சம் கண்டேன்

கோடிகோடி ஜீவன்கள் சுகித்த பின்னும் -
இன்னும் குறையாமல் வீசுதடி காற்றின் கூட்டம்
கோடிகோடி ஜீவன்கள் தாகம் தீர்த்தும் -
துளி குறைந்தொன்றும் போகவில்லை காதல் தீர்த்தம்
மூடிமூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் -
மண்ணைமுட்டிமுட்டி முளைப்பதுதான் உயிரின் சாட்சி
ஓடிஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே -
நாம்உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி

Tuesday, June 2, 2009

தீயில் விழுந்த தேனா

படம்:- வரலாறு
பாடல்:- கவி இமையம் - வைரமுத்து
இசை:- இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான்


தீயில் விழுந்த தேனா இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா இல்லை தாயுமானவனா

மழையின் நீர் வாங்கி மழையே அழுவது போல்
தாயின் உயிர் தாங்கி தனயன் அழுவானோ?
உயிரை தந்தவளின் உயிரை காப்பானா கடனை தீர்பானா
தங்கம் போலே இருந்தவள் தான் சறுகை போலே ஆனாதனால்
சிங்கம் போலே இருந்த மகன் செவுளியை போலே ஆவனா

ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா
நீ சுமந்த பிள்ளையாய் நான் இருந்தேன் அம்மா
நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா

எனக்கு ஏதும் ஆனதுனா உனக்கு வேறு பிள்ளை உண்டு
உனக்கு ஏதும் ஆனதுனா எனக்கு வேறு தாய் இருக்கா ?
நெஞ்சை ஊட்டி வழர்தவளை கண்ணில் மணியாய் சுமந்தவளை
மண்ணில் விட்டு விடுவானா மனதில் மட்டும் சுமப்பானா

தாயின் மடிதானே உலகம் தொடுங்கும் இடம்
தாயின் காலடியே உலகம் முடியும் இடம்
உயிரை தந்தவளின் உயிரை காப்பானா கடனை தீர்பானா
கருணை தாயின் நினைவினிலே கல்லும் கொஞ்சம் அழுதுவிடும்
கண்ணீர் துளிகளின் வேகத்திலே கண்ணின் மணிகளும் விழுந்துவிடும்

சந்தணத் தென்றலை ஜென்னல்கள் தண்டித்தல் நியாயமா ?

படம்:- கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
பாடல்:- கவி இமையம் - வைரமுத்து
இசை:- இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான்


இல்லை இல்லை சொல்ல ஒரு கனம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவது என்றால்
இன்னும் இன்னும் எனக்கோறு ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்

சந்தணத் தென்றலை ஜென்னல்கள் தண்டித்தல் நியாயமா?
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா?
அன்பே எந்தன் காதலை சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே ஒரு ஆயுள் வேண்டுமே

இதயம் ஒரு கண்ணாடி உனது விம்பம் விழுந்ததடி
இது தானும் சொந்தம் என்று இதயம் சொன்னதடி
கண்ணாடி விம்பம் கட்ட கயிர் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் விம்பம் ஆடுதடி

நீ ஒன்று சொல்லடி பெண்ணே இல்லை நின்று கொள்ளடி கண்ணே
எந்தன் வாழ்கையே துரத்தாதே உந்தன் விழிவிளிம்பில்
என்னைத் தூரத்தாதே உயிர் கரைஎராதே

விடியல் வந்த பின்னாலும் விடியாத இருவு எது
பூவாசம் வீசும் உந்தன் கூந்தல் அடி
இவ்வுலகம் இருண்டபின்னும் இருளாத பாகம் எது
கதிர் வந்து பாயும் உந்தன் கண்கள் அடி

பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
என் தளிர் மலரே இன்னும் தயக்ககமெண்ன
என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா?

Monday, June 1, 2009

வெள்ளை பூக்கள்

படம்:- கண்ணத்தில் முத்தமிட்டாள்
பாடல்:- கவி இமையம் - வைரமுத்து
இசை:- இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான்


வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மழலை சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிகட்டுமே
தாயின் கத கதப்பில்
உலகம் விடியட்டுமே
பிள்ளையின் சிறுமுகம் சிரிப்பில்

காற்றின் பேரிசையும்
மழை பாடும் பாடல்களும் ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ?
கோடி கீர்த்தனையும் கவி கோர்த்த வார்த்தைகளும் துளி கண்ணீர்
போல் அர்த்தம் தருமோ?

எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே!!
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ அங்கு கூவாதோ வெள்ளை குயிலே!!